மண்ணச்சநல்லூர் அருகே அன்னதானம் வழங்கிய அதிமுக நிர்வாகிகள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள்,பக்தர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 15:30 GMT
அன்னதானம் வழங்கல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை ஊராட்சி வரதராஜபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது .இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்,
பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி பிரிவின் ஒன்றிய துணைச் செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.