அதிமுக நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா!
அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் அவர்களுக்கான நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.;
Update: 2024-03-25 14:38 GMT
அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் அவர்களுக்கான நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் அவர்களுக்கான நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி S.S.கிருஷ்ணமூர்த்தி, ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S. ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் N. சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.