கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-06-25 01:52 GMT
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


  • whatsapp icon

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன நடவடிக்கை கண்டித்து அதிமுக சார்பில் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி உட்பட 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் பங்கேற்றனர்.போராட்டத்தின் போது கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசு உடனடியாக பதவி விலக்க வலியுறுத்தி அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News