வாணியம்பாடியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

Update: 2024-01-07 14:19 GMT

கூட்டத்தில் பேசும் ஓ. பன்னீர் செல்வம் 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக மக்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார், ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே கொடநாடு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் தற்போது மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது, இதுவரையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கப்படவில்லை, மேலும் கொடநாடு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லையென்றால் தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பேசினார்.

அப்பிராணி போக்கிரி வீரமணி ஒன்றுமே தெரியாதது போல் இருப்பார் ஆனால் எல்லாம் போக்கிரி தானமும் செய்வார், என்னிடம் அண்ணா, அண்ணா வருவார், பின்னர் அங்கு சென்று அண்ணா போல் படுமோசம் யாரும் இல்லை என்று கூறுவார் மேலும் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம்முடன் பல கட்சிகள் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் சிலர் தனி கட்சி தொடங்குவார் என சொல்லி வருகிறார்கள்.

எப்போதுமே அதிமுக மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் அதிமுக தொண்டனாக கட்சிக்கு உழைப்பேன் அதற்கான போராட்டத்தில் வெற்றி பெறுவோம். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது, பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் தொண்டர்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக தான் இந்த தர்மயுத்தம், நடைப்பெற்று கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம், கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும், பொறுப்பாளர்களும் தார்மீக ஆதரவு அளித்துக்கொண்டு வருகின்றார்கள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்ற முடிவிற்கு தான் இந்த தேர்தல் ஏற்கனவே பத்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக இந்திய திருநாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.

கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கின்றோம் உறுதியாக பாரதிய ஜனதா கட்சி் தலைமையில் அமைக்கின்ற கூட்டணியில் உறுதியாக வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.. மேலும் இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், கழக கொள்கை பரப்புச்செயலாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News