வீரராகவபுரம் கிராமத்தில் வைகாசி திருவிழா
வீரராகவபுரம் கிராமத்தில் வைகாசி திருவிழா கொண்டாடப்பட்டது.;
Update: 2024-05-23 03:08 GMT
வீரராகவபுரம் கிராமத்தில் வைகாசி திருவிழா கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரசக்தி விநாயகர் கோயிலில் வைகாசி திருவிழா நடந்தது. வீரராகவபுரம் கிராம பக்தர்கள் 9 நாட்கள் விரதம் இருந்து 9 நாள் திருவிழா அன்று மாயம்பெருமாள் கோயிலில் இருந்து பால்குடம், காவடி, எடுத்து ஸ்ரீவீரசக்தி விநாயகர் கோயிலுக்கு சென்றடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். பின்னர் சிறப்பு மஹா அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து மஹா தீபாராதனை நடந்தது. பெண்கள் கும்பிடுதனம் செய்து கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில், வீரராகவபுரம் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வீரராகவபுரம் கிராமத்தார்கள் செய்து இருந்தனர்.