பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி சார்பில் போராட்டம் 

பூதப்பாண்டியில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி சார்பில் போராட்டம்.;

Update: 2024-03-06 15:24 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் உள்ளாட்சி தூய்மை பணியாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதிபடுத்திடவும், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், பொது சேமநல நிதி , இ எஸ்.ஐ.மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவர் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று  நடைபெற்றது. குமரி மாவட்டம்  பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திர்க்கு ஏ.ஐ.டி.யு.சி.மாவட்டதலைவர் அனில்குமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்து பேசினார். நாகராஜன், சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தோவாளை தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம்,  மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிவகுமார் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Tags:    

Similar News