அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு அறிக்கை வெளியீடு

அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2024-05-09 09:08 GMT

நிர்வாகி

அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விவரம் பின்வருமாறு இன்று இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல அலுவலகத்திற்கு நேரில் வந்து இணை ஆணையரின் நேரடி உதவியாளரை சந்தித்து வழுவூர் விரட்டீஸ்வரர் ,

வழிக்கரையான் மற்றும் பந்தநல்லூர் செல்லியம்மன் ஆலய திருப்பணி தொடங்குவது சம்பந்தமாக கேட்டறிந்தேன். வழுவூர் வீரட்டீஸ்வரர் ஆலயத்திற்கு தனி செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு விட்டதாகவும் இனி அந்த கோவில் கும்பாபிஷேகம் ஆவணி மாதத்திற்குள் நடைபெறும் என்று என்னிடம் தெரிவித்தார், மேலும் பந்தநல்லூர் செல்லியம்மன் ஆலயம் சென்னையில்,

உயர் மட்ட குழுவில் இருக்கிறது,ஜூன் மாதம் 4ம் தேதிக்கு பிறகு செல்லியம்மன் வழிக்கரையான் இரு கோவில்களுக்கான ஒப்புதல்களும் கிடைக்க பட்டுவிடும், அதன் பிறகு திருப்பணி விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்தார்... வழுவூர் செயல் அலுவலர் திரு முத்து அவர்களிடம் அலைபேசி மூலம் வீரட்டேஸ்வரர் மற்றும் வழிக்கரையான் இரு கோயில்கள் திருப்பணி குறித்து கேட்டறிந்தேன்,

இரு கோயில்களும் ஒரே நேரத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் ஆவணி மாதத்திற்குள் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார். ஓம் நமசிவாய... இராம நிரஞ்சன்

Tags:    

Similar News