நீதிக்குழும அலுவலக வளாகத்தில் மது அருந்தியவர் கைது !!
நீதி குழும அலுவலக வளாகத்தில் மது அருந்திய ஆசிரியர் கைது தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 10:43 GMT
காவல் துறை
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இளம்சிறார் நீதிக்குழுமம் இயங்கி வருகிறது. இதில் உதவியாளராக ஸ்ரீகுமார் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி இரவு 8 மணியளவில், வேலை முடிந்து கிளம்பிய போது, நீதிக்குழும அலுவலகம் அருகில், மாதைமங்கலம் குட்டூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஸ்ரீகுமார் என்பவர் உள்பட 7 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த உதவியாளர் ஸ்ரீகுமார், அவர்களை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உதவியாளர் ஸ்ரீகுமார், தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மது அருந்திய ஆசிரியர் ஸ்ரீகுமாரை நேற்று மாலை கைது செய்தனர்.