திருவனந்தபுரத்தில் அகில இந்திய நாடார் சங்க 2-வது  மாநாடு

கன்னியாகுமரி எம்.பி பங்கேற்பு

Update: 2024-02-16 11:35 GMT
நாடார் சங்க மாநாட்டில் சிறப்புரையாற்றிய கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்
திருவனந்தபுரம் நாடார் சேவை மன்றம் சார்பில் 2 வது அகில இந்திய நாடார் மாநாடு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவில் அருகே உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நாடார் சேவை மன்ற தலைவர் கஞ்சிரங்குளம் சுதர்சனம் தலைமை வகித்தார்.  பொதுசெயலாளர் சுனில் நாடார் வரவேற்புரையாற்றினார்.           இந்த மாநாடு நிகழ்ச்சியை நாடார் மஹாசன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சங்க கொடியேற்றி வைத்தார்.  சென்னை நிதிபதி டாக்டர். ஜோதிமணி  குத்து விளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் கோவளம் சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் உட்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்கள்.இந்த மாநாட்டில் அய்யா  வைகுண்டரை சிறை பிடித்து திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் அடைந்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில்  சிட்கோ முன்னாள் சேர்மன் சிந்து ரவிசந்திரன், ஈஸ்வரமூர்த்தி, திருநெல்வேலி குயிலி நாடாச்சி உட்பட முக்கிய நிர்வாகிகள், சங்க பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News