கோர்ட் உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு
மயிலாடுதுறை நகர் திரௌபதி அம்மன் கோவில் நிர்வாகத்தில் கோர்ட் உத்தரவை மீறி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை நகர் காந்திஜி சாலை அருகே இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 50 கடை மற்றும் வீடுகள் வாடகைக்கு உள்ளது. இதில் 17 கடைகளுக்கு 3 கோடி ரூபாய் வாடகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மூர்த்தி என்பவர் 704 சதுர அடி பரப்பில் உள்ள இடத்தில் மூன்று கடைகளாக்கி உள்வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருகிறார். நீண்ட காலமாக வாடகை செலுத்தாததால் ரூபாய் 7 லட்சத்து 19 ஆயிரத்து 296 வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வாடகை செலுத்தாத மூர்த்தி கடையில் உள்ள பொருட்களை அப்பறப்படுத்தி பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது. இதை செயல்படுத்த இந்து அறநிலையத்துறையினர், டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார், வருவாய்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் கடையை சீல் வைக்க முயன்றனர்.
இந்து அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்திய வழக்கு தள்ளுபடியான திரவுபதியம்மன் ஆலய சொத்தை சீல்வைக்க விடாமாட்டோம் என மார்க்.கம்யூ கட்சியினர் துரை, விஜய் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளையும் காவல் துறையினரையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஜனவரி 25ஆம் தேதிக்குள் நீதிமன்ற ஆணையை பெறவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. உடனடியாக போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.