செம்மொழி பூங்காவிற்கு முதற்கட்டமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு - - அமைச்சர் முத்துசாமி.

செம்மொழி பூங்காவிற்கு முதற்கட்டமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு - - அமைச்சர் முத்துசாமி.

Update: 2023-12-13 17:50 GMT

செம்மொழி பூங்காவிற்கு முதற்கட்டமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு - - அமைச்சர் முத்துசாமி.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை மத்திய சிறை வளாகத்தில்  செம்மொழி பூங்கா அமைய உள்ள பகுதிகளை தமிழக  வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொதுமக்களின் குறைகளை கேட்டு குறிப்பிட்ட காலத்திக்குள் தீர்வு காண மக்களுடன் முதல்வர் திட்டம் செயல் படுத்தபட உள்ளதாகவும் மனுக்களை பெற்ற 30 நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாகவும் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார்.கோவை மாவட்டத்தில் 17 நாட்கள் தினந்தோறும் 10 இடங்களில் மனுக்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றவர் மக்களோடு முதல்வர் திட்டத்தை துவங்கவே முதல்வர் கோவை வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அன்றைய தினம் மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளதாக கூறியவர் செம்மொழி பூங்காவிற்கு முதல்கட்டமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News