குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

Update: 2024-06-28 02:56 GMT
குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, 3 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் பெய்த தொடா் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் தண்ணீா்வரத்து குறையாததால் 3 நாள்களாக தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் தண்ணீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் பேரருவியில் நீா்வரத்து சற்று அதிகமாக இருந்ததால், ஆண்கள் குளிக்கும் பகுதியில் அருவியின் மையப் பகுதிக்கு செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மூன்று தினங்களுக்குப் பிறகு அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Tags:    

Similar News