தலைமலை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம்
தலைமலை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சேவா டிரஸ்ட் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-01-25 12:04 GMT
தலைமலை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் ,மாதந்தோறும் பௌர்ணமி அன்று தலைமலை கிரிவலம் வருகிற பக்தர்களுக்கு நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி அடுத்த வரதராஜப்புரம் அடிவாரத்தில் தலைமலை சேவா டிரஸ்ட் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த வருடத்தின் முதல் பௌர்ணமி தினம் இன்று (ஜனவரி-25) காலை 6 மணிக்கு ஆரம்பித்தது மதியம் 1 மணியளவில் கிரிவலத்தை முடித்தனர்.இதையடுத்து 54வது கிரிவலமாக அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார்1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 27 கி.மீ கிரிவலம் நடந்து வந்தனர். அப்படி வரும் பக்தர்களுக்கு தலைமலை சேவா டிரஸ்ட் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், எருமப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், தலைமலை சேவா டிரஸ்ட் நிதி கமிட்டி பொறுப்பாளருமான V.சிவராஜ் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தலைமலை சேவா டிரஸ்ட் காலண்டரை அதன் நிர்வாக அறங்காவலர் அக்னி M.ராஜேஷ், மற்றும் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் கலைச்செல்வன் , சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.