திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், சேர்மனுமான இதயவர்மன் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

Update: 2023-12-27 05:15 GMT
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட திருப்போரூர் வடக்கு ஒன்றிய கலைஞர் அரங்கத்தில் திமுக திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் திருப்போரூர் சேர்மன் இதயவர்மனை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது தினசரி காலண்டரை வழங்கினார்.. அதனை தொடர்ந்து எல்லப்பன் ஏற்பாட்டில் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திருப்போரூர் சேர்மேனும், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான எஸ் ஆர் எல் இதயவர்மன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்தவர்களுக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.. அதனை தொடர்ந்து கட்சியில் இணைந்த அனைவருக்கும் தினசரி காலண்டரை எக்ஸ்பிரஸ் எல்லப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகிகள் விஜி என்கிற கோதண்டராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News