எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 09:45 GMT
எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்
நங்கவள்ளி, மேச்சேரி ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்தது.
இதில் 130-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பாலசுப்ரமணியம்,
மேச்சேரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் செல்வம், சந்திரசேகர், நங்கவள்ளி ஒன்றியக்குழு தலைவர் பானுமதி பாலசுப்ரமணியம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ராஜா ராஜரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர்.