பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.;
Update: 2024-01-19 09:38 GMT
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக முன்னாள் கிளைச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். இவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது குறித்து மாவட்ட தலைவர் தனபால் கூறியதாவது: இன்னும் பல கட்சியில் இணைய உள்ளனர். திமுக,அதிமுக கூடாரங்கள் விரைவில் காலியாக உள்ளது. மக்கள் நல்ல பாதையில் திரும்பி உள்ளனர். இந்த முக பாரதிய ஜனதா எம்.பி. தேர்தலில் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.