மாற்றுக் கட்சி கட்டுமான தொழிலாளர்கள் 200 நபர்கள் திமுகவில் இணைந்தனர்

குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள்  200 நபர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.;

Update: 2023-12-11 08:20 GMT

மாற்றுக் கட்சி கட்டுமான தொழிலாளர்கள் 200 நபர்கள் திமுகவில் இணைந்தனர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள்  200 நபர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் எடுத்து சொல்லி, மாவட்ட செயலர், நகர செயலர்கள் முயற்சியின் பேரில்  பல்வேறு  பகுதியில் மாற்றுக்கட்சியியனர்  தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமையில், கட்டுமான தொழிற்சங்கத்தை  சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அவர்கள் இதுவரை இருந்த கட்சியை விட்டு, கட்டுமான சங்க நிர்வாகி தி.மு.க.வில் இணைந்தனர். இதில் நகர செயலரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொருளர் ராஜாராம், முன்னாள் நகர செயலர் செல்வம், தொழிலாளர் அணி துணை தலைவர் அழகேசன், துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News