பண்ருட்டி எம்எல்ஏ தலைமையில் தவாகவில் ஐக்கியம்
பண்ருட்டி எம்எல்ஏ தலைமையில் தவாகவில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
Update: 2024-06-15 08:14 GMT
பண்ருட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் அந்த கட்சி அந்தப் பகுதியில் மேலும் பலம் அடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.