பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2024-03-10 13:51 GMT
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அமாவாசை தினமான இன்று பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களான வேலூர் மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதி அம்மன், நன்செய்இடையாற்று மகா மாரியம்மன், ராஜா சுவாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன்,சீராப்பள்ளி காளியம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பட விளக்கம்: சிறப்பு அலங்காரத்தில் கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் பக்கதர்களுக்கு காட்சியளித்தார்.