பரமத்தி அங்காலபரமேஸ்வரி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அங்காலபரமேஸ்வரி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-04-08 15:47 GMT
சிறப்பு பூஜை
பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தி அங்காலபரமேஸ்வரி கோயிலில் இன்று பங்குனி மாத அம்மாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதா அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அங்காலபரமேஸ்வரி கோயில் குடிப்பாட்டு மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.