அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-06 13:31 GMT

மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பிரம்மதேசம் அடுத்த நல்லாளம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனி கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வடிவேலு, பாபு, துணை செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தேசம் ஆர் பாலா, சிவானந்தம், கஸ்தூரி சந்திர சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமூர்த்தி, விஜயன் மற்றும் திமுகாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News