தமிழ்தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுதினம் கடைபிடிப்பு

Update: 2023-12-07 06:43 GMT

அம்பேத்கர் நினைவுதினம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையொட்டி தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தா.பழூர் கடைவீதியில் நடைப்பெற்றது. தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தபாபு தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதில் மாவட்ட செயலாளர் புரட்சி அரவிந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதா.கவியரசன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News