அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து புகழஞ்சலி

ராசிபுரத்தில் அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2024-04-14 14:34 GMT

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

புரட்சியாளர் சட்ட மேதை டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா அனைத்து பகுதிகளும் சிறப்பாக பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் கொண்டாடினர்.

அதன்படி ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர்  முழு திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி கோஷங்கள் எழுப்பி அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி இனிப்புகள் வழங்கினர்.

Advertisement

இந்த நிகழ்விற்கு ராசிபுரம் நகரக் கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும் கழக மகளிர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் வெ.சரோஜா, அவர்கள், மாலை அணிவித்து சிறப்பித்தார். இதில் மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ். பி. கந்தசாமி, மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், குண்டு கோபால், ஆயில் சீனிவாசன், ஸ்ரீதர், வாசுதேவன், தமிழ்ச்செல்வன், பரமேஸ்வரன்,

அன்பு, பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரி ராகவேந்திரன், மற்றும் கூட்டணி கட்சினர் தேமுதிக நகர கழக செயலாளர் இளையராஜா, நகர பொருளாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி குண்டு செல்வம், உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News