அம்மன் தாலி திருட்டு - காஞ்சி அருகே துணிகரம்
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி மற்றும் பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 10:10 GMT
அம்மன் தாலி திருட்டு போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் அடுத்த, பெரியநத்தம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வழக்கம்போல, வந்த கிராமத்தினர், கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். மாகரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், விசாரணை நடத்தியதில், கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த 1.5 சவரன் தங்க தாலி கொள்ளை அடித்துக் கொண்டு, அங்கிருந்த அம்மன் ஆடைகளுக்கு தீயிட்டு கொளுத்தி சென்றுள்ளது தெரிந்தது. அதேபோல, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலிலும், பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாகரல் போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.