அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதி உலா

சிவகாசியில் சித்திரை திருவிழாவின் 1 ஆம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைப்பெற்றது.

Update: 2024-05-01 09:33 GMT
சிவகாசியில் சித்திரை திருவிழாவின் 1 ஆம் திருவிழா, அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதி உலா....

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா,நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும்.நேற்று இரவு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'வெள்ளி சிங்க' வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.கொடியேற்ற விழா நிகழ்ச்சியில்,சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய திருவிழாக்களான 6ம் திருவிழா, வரும் ஞாயிறு கிழமையும், பொங்கல் திருவிழா செவ்வாய் கிழமையும்,கயறு குத்து மற்றும் அக்கினிசட்டி திருவிழா புதன் கிழமையும், மே 10ம் (வெள்ளி கிழமை) மாலை, சித்திரை திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News