அமமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெரியகுளத்தில் அமமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைத்து அவர்களின் எதிர்காலத்தை அடியோடு சீர்குலைக்காதே, 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு, மக்கள் விரோத திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் , டிஎன்பிஎஸ்சி தொடங்கி அனைத்து நிலைகளிலும் முறைகேடு அரசு வேலையில் முன்னுரிமை என்ன ஆச்சு, தமிழகத்தில் போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாச்சு ,போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்காதே , தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது போதை கலாச்சாரம் ,போதை வஸ்துகள் பயன்பாட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அம்மா பேரவை செயலாளரும் ,மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான டேவிட் அண்ணாதுரை இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமையில் பெரியகுளம் நகர செயலாளர்கள் விடிஆர்.பாலா, குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பெரியகுளம் நகர் அவை தலைவர் செட்டியப்பன் ,துணைச் செயலாளர் போத்தன் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சையது அபுதாஹிர் ,பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பால்பாண்டி ,மாவட்ட பிரதிநிதி முருகேஸ்வரி கார்த்திக் ,வார்டுச் செயலாளர்கள் ராஜா முத்து, ஆசைத்தம்பி, அழகுமலை, பஷீர் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ,சார்பு அணி நிர்வாகி , தொண்டர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .