தேநீர் கொட்டி 11 மாத குழந்தை பலி

சிதறால் பகுதியில் தேநீர் கொட்டி 11 மாத குழந்தை பலி - அருமனை போலீசார் விசாரணை

Update: 2024-03-03 07:47 GMT

தேநீர் கொட்டி 11 மாத குழந்தை பலி

குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் சந்திரா மகள் ஜெனிபா. இவரது கணவர் ரெவி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரெவி வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 11 மாதமே ஆன மகன் அனித் ரட்சன் உடன் ஜெனிபா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ஜெனிபாவின் சகோதரர் வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 27 ம் தேதி மாலை வேலையாட்ளுக்காக சந்திரா தேநீர் தயாரித்து, வீட்டு மாடிக்கு செல்லும் படியில் வைத்துவிட்டு கப் எடுக்க சென்றுள்ளார். அப்போது குழந்தை அணித்து ரக்சன் தவழ்ந்து சென்று கொதித்த தேநீரை இழுத்து விட்டுள்ளது.கொதித்த நிலையில் இருந்த தேனீர் குழந்தை யின் உடலில் கொட்டியது.குழந்தையின் அலறல் கேட்டு ஓடி வந்த ஜெனிபா மற்றும் சந்திரா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அனித் ரட்சன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தான். அருமனை போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News