க.பரமத்தியில் மூதாட்டி மீது பைக் மோதி விபத்து

க.பரமத்தியில் மூதாட்டி மீது பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார்.;

Update: 2023-11-21 13:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம் க.பரமத்தி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மங்களகௌரி(61). இவர் நவம்பர் 20ஆம் தேதி, காலை 9 மணி அளவில், கரூர்- கோவை சாலையில் உள்ள க.பரமத்தி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த பைக் மங்களேஸ்வரி மீது மோதியது.

இந்த விபத்தில் மங்களேஸ்வரிக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு தனியர் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த மங்களேஸ்வரி மகள் மனோகரி என்பவர், இதுகுறித்து க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.


Tags:    

Similar News