திருப்பூரில் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருப்பூர் பெருந்தொழுவில் உள்ள பிரண்ட்லைன் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-15 10:24 GMT


திருப்பூர் பெருந்தொழுவில் உள்ள பிரண்ட்லைன் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பிரண்ட்லைன் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர், பிப்.15:  தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குவின் உத்தரவின்பேரில் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஸ்வர்ணம் நடராஜன்  வழிகாட்டுதலின் பேரில் நேற்று திருப்பூர் பெருந்தொழுவு பகுதியில் உள்ள பிரென்ட்லைன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நிறங்கள் அமைப்பு மற்றும் மரியாலயா பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மறுவாழ்வு இல்லம் சார்பில் மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிறங்கள் அமைப்பின் இணை நிறுவனர் சிவகுமார். நிறங்கள் அமைப்பின் ஆர்வலர் ரஹமதுல்லா மற்றும் மரியாலயா பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மறுவாழ்வு இல்லத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்யா ஆகியோர் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்தும் அவர்களின் உணர்வுகள் மற்றும் சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

பள்ளியின் துணை முதல்வர் ராமசுதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் இறுதியாக மரியாலயா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு இல்லத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாபு நன்றி கூறினார். இந்நிகழ்வில் பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News