மூச்சுத் திணறல் நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தீயிட்டு தற்கொலை

கரூரில் மூச்சுத் திணறல் நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-04 12:13 GMT

காவல் நிலையம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ,நாதன் மருத்துவமனை அருகே உள்ள ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி அனுசுயா வயது 84. இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாகவே மூச்சுத் திணறல் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக மேற்கொண்ட சிகிச்சையும் அவருக்கு பூரண குணமடையவில்லை.

இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த அனுசுயா, மே 3-ம் தேதி மதியம் 3:30- மணி அளவில், அவரது வீட்டில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் அறிந்த அனுசுயாவின் மகன் ஸ்ரீனிவாசன் வயது 59 என்பவர், தனது தாயாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆயினும்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சீனிவாசன் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த அனுசுயாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News