சேலம் : முதியவர் தற்கொலை - காவல்துறையினர் தீவிர விசாரணை

தற்கொலைக்கான கரணம் குறித்து காவல்துறையினர் விசாரணாய் மேற்கொண்டனர்

Update: 2023-12-09 05:15 GMT

முதியவர் பூச்சி மருத்து தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டத்துக்காரன் கொட்டாய் காட்டுவளவு பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவருடைய மகன் பழனிச்சாமி 68 வயதானவர், இவர் கூலி வேலை செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு புளிய மரத்தின் அடியில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்துள்ளார். சம்பவம் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறொரு காரணம் உள்ளதா என தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News