ஓடையில் தவறி விழுந்து முதியவர் பலி
சங்கரன்கோவில் அருகே ஓடையில் தவறி விழுந்து முதியவர் பலி.
Update: 2024-05-23 06:16 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கள்ளிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடசாமி(50). இவர் நேற்று மாலை ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ள தரைபாலத்தில் ஓய்வெடுத்தார். அப்போது எதிர்பார விதமாக நிலை தடுமாறி ஓடையில் இருந்து தவறி விழுந்தார். இதனால் முதியவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார், இதனால் அவ்வழியாக வந்த பொதுமக்கள் வெங்கடசாமி சடலமாக இருப்பதை பார்த்து குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற குருவிகுளம் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.