பெரியகுளம் அருகே முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரியகுளம் அருகே முன் விரோதத்தால் உறவினரை அரிவாளால் வெட்டிய வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2024-01-20 14:57 GMT

குற்றம் சாட்டப்பட்ட முதியவர்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் மற்றும் அவரது பெரியப்பா அந்தோணி என்பவரும் கடந்த 29.07.2018 அன்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுடை உறவினரான அந்தோணி (வயது 76) என்பவர் அங்கு வந்ததுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில் இருவரும் டீக்கடையில் தன்னை பற்றி தான் பேசி கிண்டல் செய்கிறார்கள் என சந்தேகித்து அந்தோணி வைத்திருந்த ஜான் பீட்டரின் பெரியப்பாவான அந்தோணியை அவர் கைகளில் மறைத்து வைத்திருந்த அறிவாளி எடுத்து வெட்டி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஜான் பீட்டரின் பெரியப்பா கை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். இச்சம்பவம் குறித்து தேவாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவற்று சாட்சிகளின் அடிப்படையில் 76 வயது முதியவரான அந்தோணி குற்றவாளி எனத்தீர்மானிக்கப்பட்டு கொலை முயற்சி செய்ததற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதம் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News