மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-04-14 15:10 GMT

காவல்துறை விசாரணை


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, வீரியபாளையம், கோழி பண்ணை பகுதியில் வசித்து வந்தவர் அர்ஜுனன் வயது 63.இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதி இரவு 7:15- மணியளவில் வீரியபாளையம் அருகில் உள்ள வாட்டர் டேங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார் அர்ஜுனன். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அர்ஜுனன் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 13-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அர்ஜுனன் மகள் சரண்யா வயது 33 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அர்ஜுனனின் உடலை கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.
Tags:    

Similar News