ரயலில் பயணித்த முதியவா் உயிரிழப்பு
மதுரை நரிமேடு பகுதியைச் சோந்த முதியவா் ரயலில் பயணித்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துவிட்டார். இது குறித்து ரயில்வே காவல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-22 07:32 GMT
ரயலில் பயணித்த முதியவா் உயிரிழப்பு
மதுரை நரிமேடு பகுதியைச் சோந்தவா் கிறிஸ்டோபா் (80) இவா், மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை பயணித்தாா். நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டாா். மருத்துவ அவசர ஊா்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முயன்றபோது, ரயில் நிலையத்தில் அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதையடுத்து, மதுரையிலுள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.