வீட்டில் விளக்கு ஏற்றிய போது சேலையில் தீப்பற்றிய மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வீட்டில் விளக்கு ஏற்றிய போது சேலையில் தீப்பற்றிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி 13 ந்தேதிநேற்று மாலை உயிரிழந்தார்.;
Update: 2024-03-14 02:23 GMT
தீ விபத்து
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ஸ்ரீ ராகவேந்திர நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி 73 வயதான பார்வதி். இவர் கடந்த 8 ந்தேதி மாலை வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார்.அப்போது இவரது சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதில் அவர் அலறித் துடித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.தீக்காயமடைந்த பார்வதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவானைக்காவலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தீ விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை செய்து வருகின்றனர்.