தோட்டக்கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி, நீரில் மூழ்கி உயிரிழப்பு.
Update: 2023-11-20 02:55 GMT
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி குப்பாயி (73). இவர் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில், தனது வீட்டில் இருந்து ராமானுர் பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின்தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக கால் இடறி, கிணற்றில் விழுந்து, நீரில் மூழ்கி, உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மாரியப்பன் பசுபதிபாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த குப்பாயின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.