மன்னிப்பு கேட்ட சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு
மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அன்புரோஸ் என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் பெயரையும் தலைவர் விஜய் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.;
Update: 2024-04-01 12:02 GMT
மன்னிப்பு கேட்ட சுயேச்சை வேட்பாளர்
மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அன்புரோஸ் என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் பெயரையும் தலைவர் விஜய் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.தமிழக வெற்றி கழகம் சார்பில் தான் போட்டியிடுவதாக கூறி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அன்புரோஸ் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகம் அச்சிடப்பட்டிருந்த ஆடைகளை அணிந்து வந்தனர். இது தமிழக வெற்றி கழகத்திற்கும், தலைவர் விஜய்க்கு அவப்பெயரை உண்டாக்கும் சம்பவமாகும். இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகிகளிடம் நேரில் வந்து மன்னிப்பு கோரி, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்.