அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் வெற்றி

Update: 2023-12-11 18:01 GMT


கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வாலிபால் மற்றும் கபடி போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 17 மற்றும் 19 வயதின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குட்பட்ட கபடி போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரசன்னா சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் பார்த்தசாரதி பத்மா உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News