ஆந்திர மாநில சுற்றுலா பஸ் டிரைவர் சாவு 

ஆந்திர மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகளை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்த சுற்றுலா பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-05-27 02:54 GMT
பைல் படம்
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 40 பேர் ஒரு பஸ்ஸில் நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். அந்த சுற்றுலா பஸ்ஸில் உதவி ஓட்டுனராக கோதாவரி மாவட்டம் வாரிதெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன்  (60) என்பவர் இருந்தார்.  காந்தி மண்டபம் பகுதியில் வந்த போது முரளி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு உடன் வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News