அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
Update: 2024-03-14 16:56 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் அங்கபிரதட்சனம் செய்து வழிபட்டனர். தேரோட்டம் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தேர் முக்கிய வீதி வழியாக வந்து 6 மணிக்கு நிலையை அடைந்தது. பம்பை உடுக்கை மேளதாளத்துடன் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.