அங்கன்வாடி கட்டிடத்திற்கு 9 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை
மயிலாடுதுறை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்திற்கு 9 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை;
Update: 2023-12-08 01:37 GMT
அங்கன்வாடி கட்டிடத்திற்கு 9 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை
மயிலாடுதுறை மாவட்டம் ,வில்லியனூர் ஊராட்சி பகுதியில் உள்ள பாலாக்குடி ,அங்கன்வாடி 2013-2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதநாள் வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை . தொடர்ந்து மின் இணைப்பு இல்லாமலேயை, அங்கன்வாடி இயங்கி வருகிறது. இதுகுறித்து, பலமுறை மயிலாடுதுறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கோரிக்கை விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. வில்லியநல்லூரை சேர்ந்த சரவணன் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது போன்ற பல அங்கன்வாடி கட்டிடங்கள் மின் இணைப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.