பாளையங்கோட்டை கோவிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி
பாளையங்கோட்டை கோவிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-06-26 08:21 GMT
சிறப்பு பூஜை
ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பாளை விஸ்வ ஸ்ரீசுந்தர விநாயகர் கோவிலில் நேற்று (ஜூன் 25) இரவு விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.