கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-19 12:56 GMT

கால்நடை முகாம்

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அயன்ஆத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. இதில் 39 பசுகன்றுகள், 145 செம்மறியாடு மற்றும் 455 வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கபட்டது.

மேலும் 10 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யபட்டது. பின்னர் சிறந்த 10 கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இதைபோல் மொத்தமாக 1083 கால்நடைகள் பயனடைந்தன. பின்னர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் மாட்டு கொட்டகை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

இதில் கால்நடை பராமரிப்பு துறை அரியலூர் கோட்ட உதவி இயக்குனர் ரிச்சர்ட் ராஜ், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News