திருவட்டாரில் ஆஞ்சநேயர் ஜெயந்தி

திருவட்டார் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சம் மூல மந்திர ஜெபிக்கும் வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-01-11 10:19 GMT
அனுமன் ஜெயந்தி 
குமரி மாவட்டம் திருவட்டாரில் 108 அடி ஆஞ்சநேயர் சிலையுடன்  ஆஞ்சநேயருக்கு பிரமாண்ட கோவில் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.  நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி  ஆஞ்சநேய சித்தர் தலைமையில் ஒரு லட்சம் மூல மந்திர ஜெபிக்கப்பட்டது.,  தொடர்ந்து  கலசாபிஷேகம் நடந்தது.  பின்னர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு  பல்வேறு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.  பக்தர்கள் பழங்கள் சமர்பித்து ஆரத்தி எடுத்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆஞ்சநேயருக்கு ஆறாட்டு நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை   கோவில் அறக்கட்டளை    நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் டாக்டர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News