அஞ்சு வட்டத்தம்மனுக்கு 1008 லிட்டர் பாலில் அபிஷேகம்
மாசி பவுர்ணமியை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மனுக்கு 1008 லிட்டர் பாலை கொண்டு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உனுறை அட்சயலிங்க சாமி கோவிலில் அஞ்சு வட்டத்தம்மனுக்கு மாசி பவுர்ணமியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலை கொண்டு பாலபிஷேகம் நிகழ்ச்சி நேற்று 24ம் தேதி நடைபெற்றது. முருகன் சூரனை வதம் செய்ய சிக்கவில் தனது தாயர் பார்வதியிடம் வேல் வாங்கி திருச்சந்தூரில் சூரனை வதம் செய்து அந்த கொலை பாவம் தீர கீழ்வேளூர் அட்.சலிங்க சுவாமி கோவிலில் முன் உள்ள சரவண பெஜைய்கை குளத்தில் நீராடி அட்சயலிங்க சுவாமியை நோக்கி தவம் இருந்ததாகவும் முருகன் தவம் கலையாமல் இருக்க காளி நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து திசைகளிலும் காவல் காத்ததாகவும் இதனால், இங்குள்ள காளிக்கு அஞ்சுவட்டத்தம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நேற்று மாசி பவுர்ணமியை முன்னிட்டு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக லெட்சுமி வினாயகர் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், பூர்ணாஹுதி மற்றும் லெட்சுமி வினாயகருக்கு சிறப்பு லெட்சுமி அபிஷேகம் நடந்தது. பின்னர் அஞ்சுவட்டத்தம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பக்தர்கள் கோவில் சன்னதியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை சுமந்து நான்கு வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர் . பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த 1008 லிட்டர் பாலை கொண்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மஹா தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.