திருப்பத்தூர் : அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலம்

திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.;

Update: 2024-02-03 12:23 GMT

அமைதி ஊர்வலம்

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்,திமுகவை தோற்றிவித்தவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது . அதன் ஒரு பகுதியாக அறிஞர் அண்ணாவை கௌரவிக்கும் பொருட்டு திருப்பத்தூர் நகர திமுக கழகம் சார்பில் பஸ் நிலையம் அருகில் இருந்து புதுப்பேட்டை சாலை வரை அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ‌ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நகர செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூர்யகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் டி என் டி கே சுபாஷ் . டிசி கார்த்தி . கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஸ்வரன், மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக், கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா, மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் என திரளாக கலந்துக்கொண்டனர்.

    

Tags:    

Similar News