அலங்காநல்லூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றது;

Update: 2024-03-15 16:35 GMT

மறுமலர்ச்சி திட்ட பணிகள்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.18.74 லட்சம் மதிப்பீட்டில் சரந்தாங்கி கிராமத்தில் பேவர் பிளாக், கதிர் அடிக்கும் களம், உள்ளிட்ட கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சேந்தமங்கலம் ஊராட்சியில் ரூ.34.8 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, பொந்துகம்பட்டி கிராமத்தில் புதிய கதிர் அடிக்கும் களம், பேவர் பிளாக் சாலை, மற்றும் ராஜக்காள்பட்டி ஊராட்சியில் ரூ.29.20 லட்சத்தில் புதிய பேவர் பிளாக் சாலை, நியாய விலை கடை, மறவபட்டி கிராமத்தில் சமத்துவ சுடுகாடு,

Advertisement

மற்றும் கீழச்சின்னணம்பட்டி ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கதிர் அடிக்கும் களம் அமைக்க பூமி பூஜை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி, சின்னம்மாள் பெருமாள், பழனிச்சாமி, துணை தலைவர் தர்மராஜா ஆகியோர் வரவேற்றனர். ஆனையூர் பகுதி கழக செயலாளர் மருது, ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு, யூனியன் ஆணையாளர் பிரேமராஜன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சுவாமிநாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News