அன்னை மிரா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

ராணிப்பேட்டை அருகே அன்னை மிரா பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2024-05-13 02:18 GMT

விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் 

ராணிப்பேட்டை அருகே உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா (மிரா மேஸ்ட் ரோஸ்) நடந்தது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோ தரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக, திரைப்பட நடிகர்கள் வி.டி. வி.கணேஷ், ஆனந்த் பாண்டி, டி.வி. புகழ் சரத், நடிகை செல்வி கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாணவ மாணவிகளின் ஆடல், பாடல், சிலம்பம்,நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரியின் கல்வி இயக்குனர் பேராசிரியர் ஜி.வேதகிரி, முதல்வர் டி. கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், இயக்குனர்கள் ஆர்.பிரசாத், டி.கிஷோர்குமார், துறைத் தலைவர்கள், அலுவலர்கள், மாணவர் ஒருங்கிணைப்பாளர் ஹேமா ஹரிகரன், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News