தூத்துக்குடி மீனவர்களை மீட்க அண்ணாமலை கடிதம்
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 16:36 GMT
அண்ணாமலை
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு எல்லை அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாலத்தீவு கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.